நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுகூட்டம் நடைபெற்றது

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுகூட்டம் நடைபெற்றது
22 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுகூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் வரும் 22 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் வருகை தர உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நடனசபாபதி தலைமை வகித்தார். திருச்செங்கோடு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன் பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் உமாராணி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் கலந்துகொண்டு கூட்டப்பொருள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், வரும் 22 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள் பேசிய போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற எவ்வாறு உழைப்பது என்பது குறித்து வியூகம் அமைக்கஎங்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்றே முதல்வரின் கரங்களில் பரிசாக வழங்குவோம் எனக் கூறினார். கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் நடேசன், மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ரியா, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல், குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன், பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் செல்வராஜ், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள் திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story