பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் யுனிமோனி
Dindigul King 24x7 |18 Oct 2024 1:41 AM GMT
திண்டுக்கல்:பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் யுனிமோனி
திண்டுக்கல்லில்,யுனிமோனி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமோனி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில் 312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும் அந்நிய செலாவணி சேவைகள், தங்க கடன்கள் அல்லது சுற்றுலா மற்றும் விடுமுறைகள் மூலமாக இருந்தாலும்,தொழில் முறை மற்றும் கவனிப்புடன் உங்கள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.இந்த புதிய கிளையானது,இந்த பகுதியின் வளர்ச்சியில் எங்கள் வலுவான நம்பிக்கையை குறிக்கிறது.மேலும் சமூகத்திற்கு சேவை செய்யவும் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து வளரவும், நாங்கள் எதிர் நோக்குகிறோம்.தொடக்க விழா உடன் தொடர்புடைய சி.எஸ்.ஆர் முன் முயற்சிகளின் ஒரு பகுதியாக யுனிமோனி திண்டுக்கல் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடத்திற்கு மின்விசிறிகள், மற்றும் இரும்பு கட்டில்கள், திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகரவை மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்குகிறோம்.இது போன்ற சமூக சேவைகளை இந்தியா முழுவதும் தொடர்ந்து செய்து வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் அனைவரும் எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இந்த திறப்பு விழாவில் யுனிமோனி தலைமை குழு மனோஜ் வி மேத்யூ, சதீஷ்குமார்,ரதீஷ் மற்றும் தேசிய வணிக தலைவர்கள் பிரகாஷ் பாஸ்கர், (அன்னிய செலாவணி), ஜான் ஜார்ஜ் (பயணம் மற்றும் விடுமுறைகள்) டைட்டஸ் (தங்க கடன்) மண்டல தலைவர்கள் கார்த்திகேயன் (தமிழ்நாடு தெற்கு), காஜா மைதீன்( மதுரை)ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிறைவில் கிளைத் தலைவர் தியாகராஜன் முனியாண்டி நன்றி கூறினார். இதில் வாடிக்கையாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story