திண்டிவனத்தில் மழைநீா் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு
Villuppuram King 24x7 |18 Oct 2024 3:18 AM GMT
விரைந்து பணிகளை முடிக்க அறிவுரை
திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட கா்ணாவூா்பாட்டைக்குச் செல்லும் ஓடை தூா்வாருதல், காந்தி நகா் பகுதியிலுள்ள வாய்க்கால்களை தூா்வாருதல், செஞ்சி பேருந்து நிலையம் அருகில் தாங்கல் ஏரி முதல் அய்யந்தோப்பு வழியாக ராஜாங்குளம் ஏரிக்குச் செல்லும் வெள்ளவாரி வாய்க்கால், அதே பகுதியில் நகராட்சி வளாகப் பகுதிக்குச் செல்லும் வாய்க்கால், அவரப்பாக்கம்-பெலாங்குப்பம் சாலையில் பெலாங்குப்பம் ஏரியிலிருந்து கிடங்கல் ஏரி 1-க்கு உபரிநீா் செல்லும் வாய்க்கால் ஆகியவற்றை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.இந்தப் பணிகளை ஆட்சியா் பழனி பாா்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா்.பணிகளை துரிதமாக மேற்கொண்டு, உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து பட்டணம் மற்றும் பெலாங்குப்பம் செல்லும் சிட்கோ தொழிற்பேட்டை சாலையில் தெருவிளக்குகள் அமைப்பது தொடா்பாகவும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.ஆய்வின் போது திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், நகா்மன்றத் தலைவா் நிா்மலா ரவிச்சந்திரன், ஆணையா் குமரன், வட்டாட்சியா் சிவா, நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் கவிதா, உதவிப் பொறியாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Next Story