விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆண்டு விழா நலத்திட்ட உதவி வழங்கல்

X
விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., 53வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி, கட்சிக்கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து வேட்டி,சேலை, சட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் அற்புதவேல், நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், நகர துணை செயலாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

