கீழ்பவானி கான்கிரீட் எதிர்ப்பு இயக்க ஆலோசனைக் கூட்டம்
Kangeyam King 24x7 |18 Oct 2024 4:13 AM GMT
நத்தக்காடையூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கீழ்பவானி காங்கிரீட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது
காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர் கரிய காளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் கீழ்பவானி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூச்சங்காடு மணி என்கிற சண்முகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் போடாரன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலப்பாளையம் மணி வரவேற்று பேசினார். கூட்டத்தில் கீழ் பவானி பாசன பயனாளிகள் நல சங்கத் தலைவர் நல்லசாமி, செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் செல்வமணி, ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கீழ் பவனி பாசன கால்வாய் கான்கிரீட் அமைத்தல் கால்வாயில் இருபுறமும் உள்ள லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு அங்கு வசிக்கும் பல்வேறு பறவை இனங்கள் அழிந்துவிடும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு மழை பொழிவு வளம் குறையும் என தெரிவித்தனர்.
Next Story