மூன்று மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய கோத்தகிரி காவல்துறையினர்

மூன்று மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய கோத்தகிரி காவல்துறையினர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டு வாடகை பிரச்சனையில் நண்பனும் நண்பருடைய மகனும் சேர்ந்து மற்றொரு நண்பனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை முயற்சி சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய கோத்தகிரி காவல்துறையினர்...... கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ராய் 38 இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்ததாகவும் கடந்த ஆறு மாதம் முன்பு கோத்தகிரி மாலிஸ் லைன் பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர் அறிமுகமானதாகவும் இருவரும் நண்பர்கள் ஆன பின்பு கோத்தகிரி கோவில் மேடு பகுதியில் வாடகைக்கு பிரபு என்பவரது வீட்டை இருவரும் சேர்ந்து எடுத்து அதில் குடியிருந்தவாறு பணி செய்து வந்துள்ளார் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஸ்டான்லி ராய் சொந்த வேலை நிமிர்த்தமாக தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று விட்டு இரண்டு நாட்கள் முன்பு மீண்டும் கோத்தகிரிக்கு வந்துள்ளார் அப்போது தேவதாஸ் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்துள்ளார் தேவதாசும் ஸ்டான்லி ராயும் வீட்டு வாடகை பாதி பாதியாக கட்டி வந்ததாகவும் சொந்த ஊரிலிருந்து திரும்பி வந்த ஸ்டாண்லி ராயிடம் தேவதாஸ் வாடகை பணத்தை கேட்கும் பொழுது இருவருக்கும் முதற்கட்டமாக இரவு எட்டு மணி அளவில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது வெளியே சென்ற தேவதாஸ் நள்ளிரவு 12:30 அவருடைய மகன் நிவாஸ் ஆகிய இருவரும் கோவில்மேடு பகுதிக்கு வந்து ஸ்டான்லி ராயிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர் அப்பொழுது ஸ்டேன்டலி ராயை தேவதாஸ் பின்பக்கமாக பிடித்துக் கொள்ளவே தேவதாஸ் மகன் நிவாஸ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஸ்டாண்ட்லி ராயின் கழுத்தில் அறுத்ததாக கூறப்படுகிறது வலி தாங்க முடியாமல் ஸ்டான்லி ராய் கூச்சலிடவே ஸ்டான்லி ராயின் நண்பன் அங்கு வர தேவதாசும் நிவாசும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர் இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரில் அங்கு விரைந்த காவல்துறையினர் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஸ்டான்லி ராய் என்பவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் முதற்கட்ட சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் மேலும் தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு 12 மணிக்கு சம்பவம் நடந்த பின்பு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிகாலை 3 மணி அளவில் குற்றவாளியான தேவதாஸ் மற்றும் அவரது மகன் நிவாஸ் ஆகிய இருவரையும் 3 மணி நேரத்தில் தட்டி தூக்கினர் விசாரணைக்கு பின்பு கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story