ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் வட்டம் பகுதியில் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாக்கனூர் கூட்ரோடு பகுதியில் சாலை மறியல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சியில் உள்ள ஜில் ஜீவன் திட்டம் மற்றும் பதினைந்தாவது நிதி குழு திட்டத்தின் கீழ் போடப்பட்ட குடிநீர் இணைப்புகள் வீட்டிற்கே சென்று பொதுமக்கள் குடிநீர் பிடித்து வரும் நிலையில் அதே ஊராட்சியில் உள்ள அம்மையப்பன் வட்டம் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வட்டப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது மேலும் அப்பகுதி மக்கள் அங்கிருந்து சிறிது தூரம் சென்று மாக்கனூர் கூட்ரோடு சாலையில் அமைக்கப்பட்டுள்ள பைப் லைனில் மட்டுமே குடிநீர் பிடித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரிடம் பொதுமக்கள் இது குறித்து முறையிட்டுள்ளனர் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பைப்லைன் அமைத்த தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பைப் லைன் அமைத்து தர முற்படும்போது அம்மையப்பன் வட்டம் பகுதிக்கு செல்லும் வழியில் வீரபத்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது அவரிடம் அனுமதி பெற்ற பின்பு அங்கிருந்து அம்மையப்பன் வட்டம் பகுதிக்கு பைல் எடுத்துச் செல்ல முடியும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர் கூறியதாகவும் தெரிகிறது. மேலும் இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில் 25 வருடங்களுக்கு முன்பு வாய் வழியாக முறையாக பதிவு செய்யப்படாமல் 20,000 பணம் கொடுத்து ஐந்து அடி அளவிலான நிலத்தை வாங்கியுள்ளோம் இருப்பினும் தங்களை ஏமாற்றி வீரபத்திரன் வழிவிடாமல் தடுக்கிறார் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இன்று அப்பகுதி மக்கள் வீரபத்திரனின் அனுமதி பெறாமல் அந்த இடத்தில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து பைப்லைன் அமைக்க குழி தோண்டிதாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்த வீரபத்திரன் உறவினர்கள் ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மாக்கனூர் கூட்ரோடு திருப்பத்தூர் வழியாக வெலக்கல்நாத்தம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர் மேலும் இதுகுறித்து வீரபத்திரன் குடும்பத்தினரிடமும் பேசினார் அப்போது முறையாக அளந்து விட்டு பைப்லைன் போட்டுக் கொள்ளட்டும் ஆனால் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இவர்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து குழி தோண்டியதே தவறு எனவும் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது மேலும் 25 வருடங்களுக்கு முன்பு பணத்தையும் கொடுத்துவிட்டு தற்போது வலியும் இல்லாமல் பைப் லைனும் இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்
Next Story