நாட்றம்பள்ளி அருகே நீண்ட வருடங்களுக்கு பின்பு சாலை அமைக்கும் பணி துவக்கம்

நாட்றம்பள்ளி அருகே நீண்ட வருடங்களுக்கு பின்பு சாலை அமைக்கும் பணி துவக்கம்
நாட்றம்பள்ளி அடுத்த அன்சகாரம் ஜே.ஜே. நகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ₹ 11 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்*
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அன்சகாரம் ஜே.ஜே. நகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ₹ 11 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அன்சகாரம் ஜெ ஜெ நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக சாலைவசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு சாலைவசதி வேண்டும் என கோரிக்கை மனு அழுத்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று நாட்றம்பள்ளி தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இனிய ராஜகுமாரி, மல்லப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் புரட்சிசந்திரன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு அன்சாகரம் ஜே ஜே நகர் பகுதியிலிருந்து வெலக்கல்நத்தம் வரை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 11 லட்சம் மதிப்பில் சுமார் 240 மீட்டர் சிமெண்ட் சாலை பணியினை தொடங்கி வைத்தனர்.அப்போது ஊர் பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்
Next Story