ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் நீர்வரத்து ஓடைகள் தூர்வாரும் பணி தீவிரம்
Andippatti King 24x7 |18 Oct 2024 2:50 PM GMT
நீர்வரத்து ஓடைகள் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் பணியை ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பார்வையிட்டார்கள்.
ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் நீர்வரத்து ஓடைகள் தூர்வாரும் பணி தீவிரம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நீர்வரத்து ஓடைகள் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் பணியை ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பார்வையிட்டார்கள். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேளமத்து ஊரணியில் ராஜகோபாலன்பட்டி கண்மாய் மற்றும் உச்சிலுத்து கண்மாய்களுக்கு செல்லும் நீர்வரத்து ஓடைகள் புதர்மண்டி காட்சியளிப்புதாகவும், மேலும் இந்த நீர்வரத்து ஓடை தேனி-மதுரை நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளதால் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுவதாகவும் இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் நீர்வரத்து ஓடைகளை தூர்வாரும் பணியிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வேளமத்து ஊரணி பகுதி, கணவாய் பகுதியில் பெய்து வரும் மழை இந்த நீர்வரத்து ஓடைகளின் வழியாக கண்மாய்களை சென்றடையும். இதனால் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கிராம பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த நீர்வரத்து ஓடைகளை தூர்வாரும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர். பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நீர்வரத்து ஓடைகள் தூர்வாரப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story