பரமத்தி நகருக்குள் செல்லாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

பரமத்தி நகருக்குள் செல்லாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
பரமத்தி நகருக்குள் செல்லாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் எச்சரிக்கை.
பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி நகருக்குள் வந்து பயணிகளை ஏற்று இறக்கிச் செல்லாமல் பைபாஸ் சாலை வழியாக சென்ற இரண்டு தனியார் பேருந்துகளுக்கு பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் சோதனை அறிக்கை வழங்கி ஓட்டுனர் மற்றும் நடத்துவரிடம் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார் சேலம் கரூர் மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி சீட்டின் படி வழித்தடங்களில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்ல வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பரமத்தி நல அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து பேருந்துகளும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் இதனை நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (தெற்கு) முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் இதனை மீறும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஒரு சில தனியார் பேருந்துகள் தொடர்ந்து பரமத்தி நகருக்குள் வராமல் பைபாஸ் சாலை வழியாகவே இயக்கப்பட்டு வந்த நிலையில் ஆட்சியரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத வட்டாரப் போக்குவரத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் பரமத்தி நல அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மீண்டும் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு) உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணன், பரமத்தி புறவழிச் சாலையில் திடீர் ஆய்வு மேற்கண்டார். அப்போது பரமத்தி நகருக்குள் வராமல் பைபாஸ் சாலை வழியாக சென்ற இரண்டு தனியார் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கடமையாக எச்சரித்ததுடன் சோதனை அறிக்கை வழங்கி, தொடர்ந்து இது போன்ற தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் புறவழிச் சாலையில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தார்
Next Story