அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அஞ்சல் சேவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Komarapalayam King 24x7 |19 Oct 2024 2:55 AM GMT
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இந்திய அஞ்சல் சேவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இந்திய அஞ்சல் சேவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். குமாரபாளையம், அஞ்சல் அலுவலர்கள் வேலுச்சாமி, தரணி ராஜ் சுமதி ஆகியோர் இந்திய அஞ்சல் சேவைகள் குறித்து பேசினார்கள். இவர்கள் பேசியதாவது: சாதாரண தபால், விரைவு தபால், பதிவு தபால் ஆகியன மூலம் கடிதங்கள், ஆவணங்கள் அனுப்பப்படுகிறது. இங்கு சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டு பணம் சேமிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண பரிமாற்றம் செய்யலாம். மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்கள் மூலம் முதியோர் உதவி தொகை, ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல இனங்கள் அஞ்சல்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர். இதில் பேராசிரியர் ரகுபதி, அஞ்சல் நிலைய அலுவலர்கள் சரவணன், கண்ணன், சக்திவேல், பிரகாஷ், நிரோஷா, நித்தியா, யசோதா உள்பட பலர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
Next Story