புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலின் பெரும் பூஜை நடைபெற்றது

புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலின் பெரும் பூஜை நடைபெற்றது
முப்பெரும் தேவியர் கோயிலின் பெரும் பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முப்பெரும் தேவியார் பவானி அம்மன் கோவில் ஐப்பசி மகா பெருபூஜை திருவிழா-வை முன்னிட்டு அம்மன்களுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவிலின் குருநாதர் சக்தியம்மா பெண் வேடம் அணிந்து கையில் அக்னி சட்டியுடன் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து பத்து மணி நேரமாக பக்தர்களுக்கு நூதன முறையில் அருள்வாக்கு கூறினார். குருநாதர் பெண் வேடத்தில் அருள் வாக்கு கொடுக்கும் இந்நாளில் பூஜையில் கலந்து கொள்பவர்கள் திருமணதடை, நீண்ட நாட்கள், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம், வியாபாரம் அபிவிருத்தி உள்ளிட்டவர்கள் பூர்த்தியாகும் என்பது ஐதீகம். தமிழ்நாடு மற்றும் கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்...
Next Story