தொடர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த தி நவோதயா பள்ளி மாணவி.

தொடர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த தி நவோதயா பள்ளி மாணவி.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் நவோதயா பள்ளி மாணவி தொடர் சிலம்பம் சுற்றி  சாதனை.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு சார்பாக காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்கள் தனித்திறனையும் அறிவாற்றலையும்  வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது, அதில் நமது கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி வேதா ஸ்ரீ வர்ஷா கலந்துகொண்டு 60 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்து தனித்திறனை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மாவட்ட ஆட்சியர் பாராட்டையும் பெற்றுள்ளார்.  இன்று காலை பள்ளியில் நடைபெற்ற காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் செல்வி வேதாஸ்ரீ வர்ஷா அவர்களுக்கு மெடல் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பள்ளியின் பொருளாளர் தேனருவி வழங்கினார். அவர் பேசுகையில் செல்வி வேதாஸ்ரீ ஏற்கனவே உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் பல்வேறு சாதனைகளைப் பெற பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றோம், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும், நன்றியையும் பாரட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சகமாணவ, மாணவியர்கள் அனைவரும் வெகுவாக பாரட்டினார்கள்
Next Story