மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் - ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் - ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் - ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தன்னார்வ அடிப்படையில் ஒரு நாள் செஸ் விளையாட்டுப் பயிற்சியினை சனிக்கிழமை அளித்தது. ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற பயிற்சி முகாம் தொடக்க விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எம்.முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட ரோட்டரி சங்கத்தின் மகிழ்ச்சிப் பள்ளிகளின் தலைவர் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், ராசிபுரம் இன்னர் வீல் சங்கத் தலைவர் சுதாமனோகரன் ஆகியோர் செஸ் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். ஜெங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் குமரேசன் முகாமில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சியளித்தார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் செல்வம் பேசுகையில், செஸ் விளையாட்டுல் ஈடுபடுவதன் மூலம் தன்னம்பிக்கை, ஒருமுகப்படுத்துதல், சிந்தனை திறன் அதிகரிக்கும் என்றார். மேலும் இதனை மாணவர்களுக்கு கொண்டு சென்று சர்வதேச அளவில் பங்கேற்கும் வகையில் தயார்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்றார். முன்னதாக விழாவில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் தேவராசு வரவேற்றார். ரோட்டரி சங்கத்தின் முன்னாள் உதவி ஆளுநர் கே.குணசேகரன், தலைவர் தேர்வு (2025-26) இ.ஆர்.சுரேந்திரன், செயலர் ராமசாமி, பொருளாளர் பி.கே.ராஜா, வெங்கடாஜலபதி, நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story