நாமக்கல் இமயம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்.

இந்த மமுகாமில் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இமயம் சிறப்பு மருத்துவமனையில் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ முகாமை நாமக்கல் இன்னர்வீல் கிளப் தலைவர் சுகன்யா கேசவன் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் இலவச பரிசோதனைகள், சர்க்கரை அளவீடுகள், கடந்த மூன்று மாதங்களுக்கான சராசரி சர்க்கரை கண்காணிப்பு, நுரையீரல் செயல்பாடு சோதனைகள், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா மதிப்பீடுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு அட்டவணைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நிபுணரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் அபிநயா மதன்குமார், நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் உதயா ஆகியோர் முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.சர்க்கரை நோய் வராமல் தடுத்துக் கொள்வதற்கும் சர்க்கரை நோய் இருந்தால் அதை சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான உணவு, உடற்பயிற்சி ஆலோசனைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நோயாளிகளுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இந்த சிறப்பு மிக்க மருத்துவ முகாமில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் முகாமில் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர்.
Next Story