கத்தியைக் காட்டி மிரட்டி பைக், செல்போன் பறிப்பு

கத்தியைக் காட்டி மிரட்டி பைக், செல்போன் பறிப்பு
தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன், பைக்கை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் ஜே.எஸ்., நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் குகன் (26), இவர் அங்குள்ள உரத் தொழிற்சாலையில் கிளார்க் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர் ராஜேஷ் என்பவரை மோட்டார் பைக்கில் மடத்தூரில் கொண்டு விட்டுவிட்டு மீண்டும் கிருபை நகர் வழியாக முத்தையாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவரது பைக்கை பறித்து சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த குகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story