ராமநாதபுரம் பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |20 Oct 2024 7:30 AM GMT
அமிர்தா வித்யாலய பள்ளியில் மதுரை சகோதயா அமைப்பின் சார்பாக சிலம்பம் போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலய பள்ளியில் மதுரை சகோதயா அமைப்பின் சார்பாக சிலம்பம் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் முதன்மையானதும் போர்க்கலையாக மட்டுமல்லாமல் மனிதர்களுக்குச் சிறந்த உடற்பயிற்சி விளையாட்டாகவும் சிலம்பம் அமைந்துள்ளது. இப்போட்டியினை பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா அவர்களின் மேற்பார்வையிலும் பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் துணை முதல்வர் பாலவேல் முருகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போட்டிக்குச் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டுத்துறைத் தலைவர் எம் தினேஷ்குமார், கலைபண்பாட்டுத் துறை நாட்டுப்புற கலைப்பயிற்சி லோக சுப்பிரமணியன் மற்றும் கண்ணாடிவாப்பா பள்ளி முதல்வர் பி பிரமோதா ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வினைச் சிறப்பித்தனர். மேலும் பல்வேறு பள்ளிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி வாகையைச் சூடிச் சென்றனர். இப்போட்டியினைச் சிறந்த முறையில் நடத்திய பள்ளியின் விளையாட்டுத்துறை ஆசிரியர்களான சர்மா மற்றும் பேபி ஷாலினி ஆகியோரைப் பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி இலட்சுமி அம்மா அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டன வழங்கப்பட்டன
Next Story