நள்ளிரவில் திடீர் தீ விபத்து வாகனங்கள் எரிந்து சேதம்

குமாரபாளையம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் எரிந்து சேதம். தீ விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ்பாபு. இவர் தனியார் நிறுவனங்களுக்கு கணக்குகளை சரிபார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்ற தினேஷ்பாபு கார் நிறுத்தும் இடத்தில் தனது இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு இரவு உறங்க சென்றுவிட்டார். இந்நிலையில் நள்ளிரவு 11 மணிக்கு மேல் தினேஷ்பாபு வீட்டின் உள்ளே இருந்து திடீரென புகை வருவதைக் கண்ட எதிர்வீட்டினர், தினேஷ் பாபுவுக்கு அலைபேசி மூலம் தகவல் அளித்தனர். தினேஷ்பாபு குடும்பத்தினர் கதவினை திறந்து பார்த்தபொழுது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. கொழுந்துவிட்டு கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் எரியத் தொடங்கியது. மேலும் வீட்டின் கேட் உள் பக்கமாக பூட்டி இருந்ததால் திறக்க முடியாமல் பின் பக்க கதவு வழியாக பத்திரமாக வெளியேறினர். இந்நிலையில் தீ விபத்து குறித்து குமாரபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததுடன், மேல் வீட்டில் குடியிருந்தவர்களும் பின்பக்க கதவு வழியாக வெளியேறி விட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீனைப்புத்துறையினர் முன்பக்க கதவை திறக்க இயலாமல் கதவை உடைத்துக் கொண்டு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து இதுவரை காரணம் ஏதும் தெரியாத சூழ்நிலையில், அருகில் இருந்த மின்சார பெட்டியில ஏற்பட்ட மின் கசிவின் காரணமாகவோ அல்லது வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவோ தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story