இளைஞர் அணி துணை அமைப்பாளரின் தாயார் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.

இளைஞர் அணி துணை அமைப்பாளரின் தாயார் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.
இளைஞர் அணி துணை அமைப்பாளரின் தாயார் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பரமத்தி வேலூர், அக்.20: பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கழக நிகழ்ச்சிகள் பங்கேற்று சேலத்தில் இருந்து நாமக்கல்-கரூர் வழியாக திண்டுக்கல் செல்லும் திமுக இளைஞர் அணி செயலாளர் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர் தாயாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த அவர் பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த சுந்தரின் தாயார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். நிகழ்வின் போது தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் நாடாளுமன்றம் உறுப்பினருமான ராஜேஷ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story