சங்கரன்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கண்டித்து விஸ்வகர்மா சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்
Sankarankoil King 24x7 |21 Oct 2024 4:42 AM GMT
பாஜக சட்டமன்ற உறுப்பினர் கண்டித்து விஸ்வகர்மா சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்
விஸ்வகர்மா சமுதாயத்தினரை அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரை கண்டித்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள பாடாப்பிள்ளையார் கோவில் திடல் முன்பு விஸ்வகர்மா சமுதாயத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அவதூறாக பேசியதை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையெனில் எங்கள் சமுதாயம் சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story