திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற இரு தரப்பு சலலப்பு!ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்
Tirupathur King 24x7 |21 Oct 2024 9:26 AM GMT
திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற கோரி இருதரப்பு மோதல்
திருப்பத்தூர் மாவட்டம் ராச்சமங்களம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசமர தெரு பகுதியில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றி சாலை போடும் பணிகளை ஆய்வு செய்ய வந்த ஊரகவட்டார வளர்ச்சி அலுவலரை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராச்சமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசமர தெரு பகுதியில் நூறுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த தெரு சாலை பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது இந்த சாலை வழியாக அரசு பள்ளி, நியாவிலை கடை, மற்றும் கிராம நிருவாக அலுவலகம், செயல்பட்டு வருகின்றது இந்த சாலை போக்குவரத்திற்கு சிரமமாக உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ். சாலை போடும் பணியை உத்தரவு பிறப்பித்தார் இந்நிலையில் திருப்பத்தூர் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் அப்பகுதியை பார்வையிட்டார் அப்பது சில ஆண்டு காலங்களுக்கு முன்பு 16 அடி அகலம் கொண்ட தெரு சாலையை குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமிப்பு செய்து 10 அடி அகலமாக திகழ்ந்து வருகிறது ஆக்கிரமிப்பை அகற்றி சாலை போடும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வந்த ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் பார்வையிடும் போது ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து அப்பகுதியில் வசிக்கும் இரு தரப்பினருக்கும் சலசலப்பு ஏற்பட்டது உடனே ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் திரும்பி சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் சம்பவயிடத்திர்க்கு விரைந்து சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story