இந்து சமய அறநிலைத்துறை மூலம் சீர்வரிசையுடன் இலவச திருமணங்கள்
Sivagangai King 24x7 |21 Oct 2024 10:21 AM GMT
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கொல்லங்குடி ஊராட்சியில், அரியாகுறிச்சி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயிலில் 21 இணைகளுக்கு திருமணங்கள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, திருக்கோயில்களின் சார்பில் திருமண விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, கொல்லங்குடி அரியாகுறிச்சி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயிலில் 21 இணைகளுக்கு திருமணங்கள் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம், திருக்கோயில்களின் சார்பில் திருமண விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று (21.10.2024) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கொல்லங்குடி ஊராட்சியில், அரியாகுறிச்சி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயிலில் 21 இணைகளுக்கு திருமணங்கள் நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 30 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 600 இணைகளுக்கு அந்தந்தப் பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை 2022-2023 மானியக் கோரிக்கையின் போது, அறிவிப்பு எண்:14-ன்படி அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்திலுள்ள சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மொத்தம் 21 இணைகளுக்கு இன்றையதினம் கொல்லங்குடி ஊராட்சிக்குட்பட்ட அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயிலில் திருமணங்கள் துறை சார்பில், நடத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட இணைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோர் வருகை புரிவதற்கு ஏதுவாக, பேருந்துகள், தங்குமிடம், உணவு ஆகிய வசதிகள் ஏற்படுத்தித்தருவது மட்டுமன்றி, திருமாங்கல்யம், சீர்வரிசை பொருட்கள் உட்பட செலவினங்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் நிர்வாகத்தினரால் நடத்திட இந்து சமய அறநிலையத்துறை ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சியின் வாயிலாக 21 இணைகளுக்கு திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் (சந்தை விலைக்கு ஏற்ப), மணமகள் மற்றும் மணமகன் ஆகியவர்களுக்கான ஆடைகள், திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு, மணமக்களுக்கு மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைகள் திருக்கோயில் நிர்வாகத்தினர் சார்பில் கோயில் உபயதாரர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஏழை எளிய மற்றும் சாமானிய மக்களுக்கும் பயனுள்ள வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து தமிழக மக்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, நடைபெற்றுள்ள திருமண விழாவின் மூலம், வாழ்க்கையில் இணைந்துள்ள மணமக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று, வளம் பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் புவனேஷ்வரி மற்றும் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ராஜேஸ்வரி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கண்ணப்பன், திருக்கோவில் அறங்காவலர் சந்திரன், கொல்லங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் மெய்ஞானமூர்த்தி,கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் நாராயணி மற்றும் மணமக்கள், மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story