பஞ்சாயத்து பெண் கவுன்சிலர்கள் நான்கு பேர் ராஜினாமா

பஞ்சாயத்து பெண் கவுன்சிலர்கள் நான்கு பேர் ராஜினாமா
தூத்துக்குடி மாவட்டம் பொட்ட லூரணி கிராமத்தில் அருகே அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாயத்து பெண் கவுன்சிலர்கள் நான்கு பேர் ராஜினாமா
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் உள்ள தனியார் மீன் ஆலையை அகற்ற வேண்டும், இந்த தனியார் மீன் ஆலையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுபா, ஆதிலட்சுமி, பூமாரி அம்மாள், சத்திய நாராயண லட்சுமி ஆகிய நான்கு நான்கு பேர் உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர் . இன்று நடைபெற்ற மக்கள் குறைதீற்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் நான்கு பேரும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் நான்கு பேர் இன்று ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.
Next Story