உடுமலையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி நிறைவு

பரிசுத்தொகை கோப்பைகள் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு கடந்த 19 ம் தேதி மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கபடி போட்டி துவங்கியது.முதல் நாளில் பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணிக்கு முதல் பரிசு முதல் பரிசு ரூ 15 ஆயிரம் மற்றும் கோப்பையும் இரண்டாம் பரிசு பெற்ற உடுமலை அணிக்கு ரூ 10ஆயிரம் மற்றும் கோப்பையும் , மேலும் முறையே மூன்றாம் நான்காம் பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான கபடி இறுதி போட்டியில் வெற்றி பெற்ற தமிழன் தளவாய் பட்டினம் அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரூ 20 ஆயிரம் ,இரண்டாம் பரிசாக பழனி போலீஸ் அணிக்கு கோப்பை மற்றும் ரூ 10 ஆயிரமும், மேலும் மூன்றாம் 4-ம், ஐந்தாம் பரிசு பெற்ற அணிகளுக்கு கோப்பை ரொக்கபரிசு வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டங்களை சேர்ந்த 43 அணி ஆண்கள் மற்றும் பெண்கள் அணி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு உடுமலை வியாபாரிகள் சங்க செயலாளர் மெய்ஞ்ஞான மூர்த்தி (எ)தங்கராஜ் ஆடிட்டர் சிவப்பிரகாசம் , உடுமலை மக்கள் பேரவை தலைவர் முத்துக்குமாரசாமி , உடுமலை மகளிர் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் பலர் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் கே ஆர் எஸ் செல்வராஜ் ,அறக்கட்டளை நிர்வாகிகள் பாலமுருகன் ,மற்றும் பலர் செய்து இருந்தனர்.
Next Story