அமராவதி அணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி அணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பொதுப்பணித்துறை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது இதனால் அணைக்கு நீர்வரத்து தற்பொழுது காலை 7 மணி நிலவரப்படி 3855 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அமராவதி அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது 85.24 அடியாக உள்ளதால் அணையின் பிரதான மதகுகள் வழியாக எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர கிராமங்களான கல்லாபுரம் கொழுமம் குமரலிங்கம் ருத்ரபாளையம் பாளையம் மடத்துக்குளம் ,கணியூர் ,காரத்தொழவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
Next Story