பனை விதைகள் நடும் பணி
Komarapalayam King 24x7 |22 Oct 2024 1:14 AM GMT
ஒரு கோடி பனைவிதை நடும் நடும் பணியின் ஒரு கட்டமாக தட்டாங்குட்டை ஊராட்சி, ஒட்டன்கோவில் பகுதியில் பனை விதைகள் நடப்பட்டது.
ஒரு கோடி பனைவிதை நடும் நடும் பணியின் ஒரு கட்டமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சி, ஒட்டன்கோவில் வாய்க்கால் கரையோரம் தளிர்விடும் சார்பாக பனை விதைகள் நடப்பட்டது. இன்ஸ்பெக்டர் தவமணி, நாமக்கல் வனத்துறை அலுவலர் பிரவீன்குமார் தலைமை வகித்தனர். ஒட்டன் கோவில், வேமன்காட்டுவலசு, தட்டான்குட்டை, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வாய்க்கால் கரையோரம் பனை விதைகள் நடப்பட்டன. ஊராட்சி தலைவி புஷ்பா பணிகளை துவக்கி வைத்தார். பனை மரத்தின் உபயோகம் குறித்து பொதுநல ஆர்வலர் சித்ரா அப்பகுதி பொதுமக்கள் மற்றும், மாணவ, மாணவியர் வசம் எடுத்துரைத்தார். இதில் மல்லிகா, உஷா, பிரபு, அன்பழகன், ரவி, ராம்கி உள்பட பலர் பங்கேற்றனர்
Next Story