அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
Komarapalayam King 24x7 |22 Oct 2024 1:18 AM GMT
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆணையின்படி மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் காவல்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை சாக்லேட், போலி மதுபான பாட்டில்கள் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர். போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று பேசுகையில், போதை பொருட்களினால் ஏற்படும் தீமை குறித்தும், அதனை வாங்க கூடாது என்றும், அப்படிப்பட்ட நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள் என்றும் மாணவர்களிடம் கூறினார். போதை பொருட்கள் உபயோகப்படுத்த மாட்டோம் என மானவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேராசிரியர்கள் ரகுபதி, ஞானதீபன், சரவணாதேவி, ரமேஷ்குமார், எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ. குணசேகரன், ராம்குமார், மாதேஸ்வரன், பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story