சங்கரன்கோவிலில் ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெற்றது
Sankarankoil King 24x7 |22 Oct 2024 1:53 AM GMT
ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நியாயவிலைக் கடை ஊழியா்களை அந்தந்தப் பகுதிகளில் நியமிக்க வேண்டும், ஊழியா்களிடம் பிடிக்கும் அபராதத் தொகையை இரு மடங்காக உயா்த்தியதை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்டத் தலைவா் காளிதாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சண்முகசாமி, பொருளாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஹரிஹரன், ராஜ் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story