ஆம்பூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
Tirupathur King 24x7 |22 Oct 2024 2:41 AM GMT
ஆம்பூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 4 மணி நேரம் லஞ்ச ஒழிப்புதுறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டவிரோதமாக பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் கௌரி தலைமையிலான 5 பேர் கொண்ட அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலகத்தில் 4 மணி நேரத்திற்க்கும் மேலாக சோதனை செய்தனர், இதில் கணக்கில் வராத 53 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்க்கொண்டனர்.
Next Story