உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் :மேயர் பேச்சுவார்த்தை!

உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் :மேயர் பேச்சுவார்த்தை!
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
தூத்துக்குடியில் லைசென்ஸ்தாரர்கள் உப்பளங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களது 2024 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் சம்பந்தமாக உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் மற்றும் தூத்துக்குடி தொகுதி உப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலே மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார். பேச்சு வார்த்தையின் முடிவில் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை விட ரூபாய் 1020 அதிகப்படுத்தி ரூ.8950 கொடுப்பதென ஏக மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதில், சங்கத்தின் நிர்வாகிகள் மூர்த்தி, கனகராஜ், விஜி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story