கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்:
Thoothukudi King 24x7 |22 Oct 2024 4:41 AM GMT
கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்: இ-சேவை மையம், ரேஷன் கடைகள் மூடப்பட்டன!
கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளதால் ரேஷன் கடை, இ-சேவை மையங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையை இருமடங்கு வசூலிக்கப்படும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் நேற்று திங்கள்கிழமை முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அதன்படி சாத்தான்குளம் வட்டடத்தில் உள்ள 7 கூட்டுறவு கடன் சங்கத்தில் 23 பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது. மேலும், 35 ரேஷன் கடைகள் மூடப்பட்டன. சங்கத்தைச் சேர்ந்த இ-சேவை மையங்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
Next Story