பணப்பையை தவறவிட்ட பயணியிடம் பணத்தை ஒப்படைத்த நடத்துனர்!

நிகழ்வுகள்
மதுரையில் இருந்து புதுக்கோட்டை வந்த அரசு பேருந்தில் பயணி தவறவிட்ட பணப்பையை பத்திரமாக மீட்டு அதனை பயனிடம் ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனரின் செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது. நேற்று இரவு புதுக்கோட்டை புறநகர் கிளைக்கு உட்பட்ட பேருந்து ஒன்று மதுரையில் இருந்து தஞ்சை சென்றுள்ளது. இந்த பேருந்தில் தஞ்சை மாவட்டம் மேலத்தெருவை சேர்ந்த கணேசன் என்ற பயணி மதுரையில் ஏறி புதுக்கோட்டைக்கு டிக்கெட் எடுத்து பபயணித்ததோடு தான் கொண்டு வந்திருந்த பணப்பையை சீட்டின் மேற்புறம் உள்ள லக்கேஜ் வைக்கும் கம்பியில் வைத்துள்ளார். அதன்பின் இரவு 11 மணியளவில் பேருந்து புதுக்கோட்டை வந்ததும் அவர் இறங்கி சென்றுள்ளார். பேருந்தும் தஞ்சையை நோக்கி புறப்பட்டு விட்டது.பயணி கணேசன் அமர்ந்திருந்த சீட்டின் மேற்புறம் ஒரு பேக் மட்டும் இருப்பதை பார்த்த பேருந்தின் நடத்தின பாலகுமார் அந்தப் பையை திறந்து பார்த்துள்ளார். அதில் 500 ரூபாய் நோட்டுகளாக 25,000 ரூபாய் இருந்தது தெரிய வந்தது.இதனையடுத்து அவர் புதுக்கோட்டை புறநகர் கிளைக்கு அலைபேசியில் அழைத்து பயணி தவறவிட்ட பணப்பை தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே பணப்பையை தவறவிட்ட கணேசனும் புதுக்கோட்டை புறநகர் கிளையை அணுகிய நிலையில் அவரது பணப்பை பத்திரமாக இருப்பதை கூறிய அதிகாரிகள் பேருந்து தஞ்சை சென்று விட்டு மீண்டும் புதுக்கோட்டை வந்ததும் அவரது பணம் 25,000 உள்ளிட்ட பையை நடத்துனர் பாலகுமார் போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் கணேசனிடம் ஒப்படைத்தார். பயணி தவறவிட்ட 25000 பணம் இருந்த பையை அரசு பேருந்து நடத்தினர் சம்பந்தப்பட்ட பயணியிடம் ஒப்படைத்த நிகழ்வு பாராட்டுக்களை பெற்றது.
Next Story