ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஐஎம் சார்பில் குடியேறும் போராட்டம்

அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனுங்கூர் ஊராட்சி வைரபுரி காலனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், குழந்தை தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் சிலிண்டர் அடுப்பு பாத்திரம், பழுதடைந்த வீடுகளின் புகைப்படங்கள் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி குடியேறும் போராட்டம் நடத்தினர். வைரபுரி காலனியில் பழுதடைந்த வீடுகள் பராமரிப்பு, புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பொது கழிப்பிடம், நாடக மேடை, சமுதாயக்கூடம், தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் இனுங்கூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் திகைத்துப் போன அதிகாரிகள் உங்கள் கோரிக்கை மனு அளியுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story