பரமத்தி வேலூர் வார சந்தை புதிய வளாகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
Paramathi Velur King 24x7 |22 Oct 2024 2:45 PM GMT
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் வார சந்தை புதிய வளாகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பரமத்தி வேலூர். அக்.22: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வந்த வாரச்சந்தையில் வியாபாரிகள்நலனுக்காகவும் பயன்பாட்டிற்காகவும் ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளாகம் கட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை வழங்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வருகை தந்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பரமத்தி வேலூர் புதிய வார சந்தை வளாகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சா் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் உடன் இருந்தனர். பரமத்தி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் லட்சுமிமுரளி முன்னிலை வகித்து புதிய சந்தை வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் திமுக நகர செயலாளர் முருகன்,வழக்கறிஞர் பாலகிருஷ்ணன்,உதயகுமார்,தேன்மொழி, சடையப்பன் மற்றும் துணை தலைவர், திமுக நிர்வாகிகள் மற்றும் வேலூர் பேரூராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story