நாமக்கல் மாவட்டத்திற்கு முத்தான நான்கு திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் அந்த வகையில் இப்போது நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு திட்டங்களை அறிவிக்கிறேன்....
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் பொம்மைகுட்டைமேடு என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், 140 திட்டப் பணிகளுக்கு ரூ. 366 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். ரூ. 298 கோடி மதிப்பீட்டில் 134 நிறைவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைத்தார். சுமார் 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அந்த வகையில் ரூ.664 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்.... “தமிழ்நாடு வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா விளங்கிக் கொண்டிருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் அந்த வகையில் இப்போது நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு திட்டங்களை அறிவிக்கிறேன்....
அறிவிப்பு நெம்பர் 1
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நாமக்கல் மாநகராட்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்படும். அறிவிப்பு நெம்பர் 2 கொல்லிமலை பகுதியில் விளையும் பழங்கள் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய குளிர்பதன கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும். அறிவிப்பு நெம்பர் 3 மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் மாற்றம் செய்யப்படும் எத்தனால் உற்பத்தியலகு நாலு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். அறிவிப்பு நெம்பர் 4 நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் நெடுஞ்சாலை துறை மூலமாக 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படும். இந்த அறிவிப்புகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
Next Story