அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு.
Arani King 24x7 |23 Oct 2024 12:19 AM GMT
ஆரணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு.
ஆரணி அருகே தச்சூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வரலாற்றில் முதல்முறையாக ஏஐசிடியு நிதியுதவியுடன் மூன்று நாள் பன்னாட்டு கருத்தரங்கு மேம்பட்ட பொருட்கள் அரிதான மற்றும் சிக்கலான தனிமங்கள் என்ற தலைப்பில் திங்கள்கிழமை துவங்கியது. இக்கருத்தரங்கு துவக்க விழா நடைபெற்றதில் ஆரணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் ஜி.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். இங்கு தமிழ்நாடு கிராமப்புற அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மேம்பட்ட பொருட்களின் முனைப்பு பகுதிகள் மீதான ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்த கருத்து விழா நடைபெற்றது. இக் கருத்தரங்கம் அக்டோபர் 21 முதல் 23 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் முக்கிய கருப்பொருளான மேம்பட்ட பொருட்கள் அரிய பூமி மற்றும் சிக்கலான கனிமங்களின் வளர்ச்சி மற்றும் அதனுடைய மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கிராமப்புற அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே ஆராய்ச்சியினை வளர்க்கும் பொருட்டும் தம் மண்டல மொழிலாளிகளின் மூலம் மாணவர்கள் உயர் கல்வி பயில ஏதுவான சூழ்நிலை உருவாக்கும் நோக்கத்தோடு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இதில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தமிழ் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் பி.உமாமகேஸ்வரி தொடக்க உரையாற்றி பழைய தமிழ் இலக்கியங்களில் பல தொழில்நுட்பங்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்கு மிக உயர்ந்த ஆற்றல் உள்ளது அதனால் அது தன்னை வளர்த்துக் கொள்வதோடு தமிழ் மொழியைச் சார்ந்திருக்கும் மக்களையும் வளர்த்துக் கொள்கிறது வரையறுக்கப்படாத ஆராய்ச்சிக்காக உள்ளடக்கிய தமிழ்மொழி என்று பேசினார். அண்ணா பல்கலைக்கழக தொகுதி கல்லூரிகளுக்கான மைய இயக்குனர் பேராசிரியர் ஹரிஹரன் சிறப்புரையாற்றினார் சிறப்பு உரையில் இயற்கையை பாதுகாக்க அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்பங்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டார் தவிர உலகின் சிறந்த தேசமாக நமது நாட்டின் உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
Next Story