மேற்குஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Arani King 24x7 |23 Oct 2024 12:22 AM GMT
ஆரணி அடுத்த சம்புவராயநல்லூர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு மேற்குஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஆரணி அடுத்த சம்புவராயநல்லூர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு மேற்குஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேற்குஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த சம்புவராயநல்லூர் கிராமத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை 100 நாள் வேலை திட்டத்தில் பணியே நடக்கவில்லை என்றும் மற்ற கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் நடந்துவருவதாகவும் கூறி சம்புவராயநல்லூர் கிராமத்றிக்கும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தி கிராம மக்களுக்கு பணி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மேற்குஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் விவசாய பிரிவு சங்க மாவட்ட செயலாளர் கே.கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்டசெயற்குழு சி.அப்பாசாமி, சிஐடியு பொதுக்குழு பெ.கண்ணன், சிபிஐ வட்டார செயலாளர் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர் மேற்குஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் அக் 24 முதல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சம்புவராயநல்லூரில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story