முதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
Nagercoil King 24x7 |23 Oct 2024 2:14 PM GMT
கருங்கல் அருகே
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் என்ற சபரி முத்து (75). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தொபியாஸ் (53). கூலி தொழிலாளி. தினமும் மது குடித்துவிட்டு சாலையில் நின்று தகராறு செய்வது வழக்கம். கடந்த 15 -2 - 2019 அன்று இரவு 11.30 மணி அளவில் சவுரிமுத்து வீட்டருகே உள்ள குருசடிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது தொபியாஸ் போதையில் தகராறு செய்து, சபரிமுத்துவை கல்லால் முகத்தில் தாக்கினார். இதில் சவரிமுத்து முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து தொபியாசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு வழங்கினார். சவரிமுத்துவை கொலை செய்த தொபியாசுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story