உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
Thoothukudi King 24x7 |23 Oct 2024 3:08 PM GMT
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக தகுதியுடையவர் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக தகுதியுடையவர் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நலவாரிய உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர் என்பதற்கு ஆதாரமாக அவர் பணிபுரியும் பள்ளிவாசல்கள், மதராஸாக்கள் போன்ற நிறுவனத்திலிருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது பூர்த்தி செய்து 60 வயதுக்குட்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் மதராஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர்கள். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் போன்று நலத் திட்டங்கள்
Next Story