வீட்டை கட்டுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றும் தடுத்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள்.
Arani King 24x7 |23 Oct 2024 5:34 PM GMT
ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் பட்டா இடத்தில் வீடு கட்டி வருபவரை அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள சரவணன் என்பவர் தடுத்து நிறுத்தம் செய்யும் காட்சி.
ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் பட்டா இடத்தில் ஆரணி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வீட்டை கட்டி வருபவரை அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவரும் நபர் வீட்டை கட்ட விடாமல் தடுத்து வருவதால் ஆரணி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் எஸ்.என்.பழனி என்பவர் சொந்தமாக வீடுகட்டி வருகிறார். இந்நிலையில் கட்டப்பட்டு வரும் வீட்டின் மேற்குபுறம் அரசு இடத்தை ஆக்கரிமித்து உள்ள ஏழுமலை சரவணன் என்பவர் வீட்டின் பூசு வேலையை செய்ய விடாமல் தடுத்து வருகிறார். இது குறித்து வீட்டின் பூச்சு வேலைக்கு ஆரணி உரிமையியல் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் மீண்டும் பணி செய்ய விடாமல் தடுத்து வருவதால் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் இது குறித்து எஸ்.என்.பழனி புகார் கொடுத்தார்.இதன்பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கிராமிய இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திடம் பரிந்துரை செய்தார். இதன் பேரில் ஆரணி கிராமிய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் விசாரணை நடத்தி பாதுகாப்பு கொடுத்து வீட்டை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
Next Story