எடப்பாடி மற்றும் கொங்கணாபுரத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் அமைச்சர் பங்கேற்பு
Edappadi King 24x7 |23 Oct 2024 5:48 PM GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்... சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 2000த்திற்க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வழங்கினர் அதில் சில மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார். முன்னதாக பேசிய அமைச்சர் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வந்திருப்பதாகவும் தங்கள் கொண்டு வந்திருக்கும் மனு பதிவு செய்து அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.... தொடர்ந்து குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா,மற்றும் மருத்துவ பெட்டகம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்,மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, ஆகியோர் வழங்கினார். அப்போது எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் சம்பத்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதே போன்று சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பெண்களுக்கு தையல் மிஷின், வீட்டு மனை பட்டா, விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய விதை, பெண்களுக்கு மருந்து பெட்டகம், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார். அப்போது கொங்கணாபுரம் ஒன்ற செயலாளர் பரமசிவம் எடப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story