திருவேங்கடத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கு பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் வரவேற்புரை ஆற்றினார். திருவேங்கடம் உதவி ஆய்வாளர் யோபு சம்பத் ராஜன் மற்றும் பெண் காவலர் கவிதா தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். போதைப் பொருள் விழிப்புணர்வு ஆசிரியர் முனிராஜ் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள், போதைப் பொருள் ஒளிப்பு விழிப்புணர்வு , சொல்ல கூடாத விஷயங்கள், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைமை ஆசிரியர் பொன்னரசன். ஓவியா ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
Next Story

