இரு கரையை தொட்டவாறு சென்ற காவிரி ஆறு

X
Komarapalayam King 24x7 |24 Oct 2024 5:43 PM ISTகுமாரபாளையத்தில் இரு கரையை தொட்டவாறு காவிரி ஆறு செல்கிறது.
கர்நாடக அணையில் இருந்து நீர் வரத்து குறைந்ததையடுத்து, மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்தது. சில நாட்களாக கர்நாடக பகுதியில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணையிலிருந்து மேட்டூருக்கு அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரியின் இரு கரையை தொட்டவாறு காவிரி ஆறு செல்கிறது.
Next Story
