தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் இயக்கம் குறித்து அறிவிப்பு.

தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் இயக்கம் குறித்து அறிவிப்பு.
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் இயக்கம் குறித்து அறிவிப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, (கர்நாடகாவில் உள்ள) ஹூப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்டை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அறிவித்துள்ளார்.     மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக ஹூப்பள்ளி - கொல்லம் இடையே ரயில் எண்.07313 ஹூப்பள்ளி - கொல்லம் சிறப்பு ரயில் 26.10.24 அன்று ஹுப்பள்ளியில் இருந்து 15.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 17.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதே போல ரயில் எண்.07314 கொல்லம் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில் 27.10.24 அன்று கொல்லத்தில் இருந்து 20.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 20.45 மணிக்கு ஹுப்பள்ளியை சென்றடையும். இந்த ரயில்கள்   ஹாவேரி, ராணிபென்னூர், தாவங்கரே, பிரூர், அரசிகெரே, தும்கூர், சிக்க பாணாவர, SMVT பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசிநல்லூர், தென்காசிநல்லூர், தென்காசிநல்லூர் ஔவனீஸ்வரம், கொட்டாரக்கரை மற்றும் குந்தாரா ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் எனவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
Next Story