மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கல்வி நிதி சார் விழிப்புணர்வு கூட்டம்.
Arani King 24x7 |24 Oct 2024 5:15 PM GMT
ஆரணி அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கல்வி நிதி சார் விழிப்புணர்வு கூட்டத்தில் வங்கி கிளை மேலாளர் விஜயா தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மகளிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
ஆரணி அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி நிதி சார் விழிப்புணர்வு கூட்டத்தில் தமிழக அரசு மகளிருக்கு வழங்கும் கடனுதவி திட்டங்கள் குறித்து மேலாளர் விஜயா விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தேவிகாபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை சார்பில் நிதிசார் கல்வி விழிப் புணர்வு முகாம் நடைபெற்றதில் வங்கி மேலாளர் விஜயா தலைமை தாங்கி பேசியது, தமிழக அரசு கிராமப்புற மகளிர் வாழ்வாதாரத்திற்காக எண்ணற்ற கடனுதவிகளை வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பெண்கள் வாழ்வாதாரத்தில் வளர்ச்சி பெற்று உள்ளனர். நபார்டு வங்கி உதவியுடன் தேவிகாபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நகை கடன், தொழில் முனைவோர்கள், விவசாயிகளுக்கு மானியத்து டன் வழங்கப்படும் கடனுதவி ,மகளிர் சுயஉதவிக் கடன்கள், சிறுவணிக கடன், ஆதரவற்ற விதவை பெண்களுக்கு கடன் உதவி, வைப்பு தொகை சேவை, சிறுவணிக கடன் ஏடிஎம்கார்டு சேவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் களுக்கு வங்கி மூலம் வழங் கப்படும் கடன்கள், வீட்டு கடன், மற்ற வங்கிகளுக்கு பண பரிவர்த்தநை குறித்து மகளிர் சுய உதவிக்குழுக் கள் மற்றும் பொதுமக் களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, முகாமில் தேவிகாபுரம் மத்திய வங்கி கிளை சார்பில் வாடிக்கையாளர்கள் 10 நபர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டது . இதில் மகளிர் சுயஉதவி குழுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story