சத்தியில் கனமழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

X
சத்தியில் கனமழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு சத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கன மழை பெய்தது. சத்தியில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மாலை வெப்பத்தின் தாக்கம் காரணமாக உருக்கமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பண்ணாரி அருகே உள்ள வனப் பகுதி ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியில் 51.0 மில்லி மீட்டர் மலையும், தாளவாடியில் 22 மில்லி மீட்டர் மலையும் பெய்தது. கனமழை காரணமாக சத்தி - மேட்டுப்பாளையம்ரோட்டில் காந்தி நகர் பகுதியில் பெரிய வேப்ப மரம் ஒன்று வேருடன் ரோட்டில் விழுந்ததால் அந்த வழியாக வானங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கோனமூலை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்நாதன் ஊழியர்களை வரவழைத்து வெட்டி அப்புறப்படுத்தியதை அடுத்து போக்குவரத்து சீரானது.
Next Story

