கொல்லிமலை- செம்மேடு அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லிமலை தாலுகா மாநாடு வலியுறுத்தல்

கொல்லிமலை- செம்மேடு அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லிமலை தாலுகா மாநாடு வலியுறுத்தல்
கொல்லிமலை மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் மிளகு மற்றும் காபி உள்ளிட்டவற்றை அரசு நியாய விலைக் கடைகளில் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கொல்லிமலை தாலுகா மாநாடு 2024 கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.கொல்லிமலை மக்களுக்காக போராடிய தோழர்களின் நினைவு ஜோதியை கட்சியின் மூத்த தோழர் வி.கே. வெள்ளைச்சாமி தலைமையில் கையில் ஏந்தி ஊர்வலமாக செம்மேடு பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.செம்மேடு கிளைச் செயலாளரும் மூத்த தோழர் கே.வி.ராஜ் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார், மாநாட்டின் அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த தியாகங்கள் மற்றும் தோழர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.மாநாட்டு அரங்கத்திற்கு கொண்டுவரப்பட்ட நினைவு ஜோதியை கட்சியின் மூத்த தோழர்கள் எஸ்.கே.ஆண்டி மற்றும் எஸ்.சி.பாலையா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.மாநாட்டின் தலைமை குழு வ.கே.வெள்ளைச்சாமி, எஸ்.கே.மாணிக்கம், சி.ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று தின்னனூர் நாடு எடவுகல்பட்டி கிளைச் செயலாளர் எஸ்.கே.மாணிக்கம் பேசினார்.மறைந்த தோழர்களுக்கான அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்து கட்சியின் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் எஸ்.தங்கராசு பேசினார்.மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் பி.ஜெயமணி பேசினார். மாநாட்டின் ஸ்தாபன வேலை அறிக்கை முன்மொழிந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி கண்ணன் பேசினார். மாநாட்டை நிறைவு செய்தும் புதிய தாலுகா குழு உறுப்பினர்களையும் தாலுகா குழு செயலாளரையும் அறிமுகம் செய்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி நிறைவு உரையாற்றினார். மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் தோழர் எஸ்.சி. சிவனேசன் நன்றி கூறினார். முன்னதாக மாநாட்டில் ஒன்பது பேர் கொண்ட தாலுக்கா குழு தேர்வு செய்யப்பட்டது.புதிய தாலுகா குழு செயலாளராக தோழர் எஸ்.தங்கராசு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.தாலுகா குழு உறுப்பினர்களாக தோழர்கள் எஸ்.பாரதி, விபழனிச்சாமி, இ.பன்னீர்செல்வம், சி.ரேவதி,சி.ராஜம்மாள், பி.கோபிநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இரண்டு தாலுகா குழு உறுப்பினர்கள் காலி இடமாக விடப்பட்டுள்ளது பின்னர் இணைப்பதற்கு மாநாடு ஒப்புதல் தெரிவித்துள்ளது.மாநாட்டில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 12 தோழர்கள் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொல்லிமலையின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப செம்மேடு அரசு மருத்துவமனையை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ரீ- சர்வே குளறுபடிகளை சரி செய்து இணைய வழியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,2006 வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி அனுபவ நிலங்களுக்கு பட்டா உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்,கொல்லிமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கிட வேண்டும்,கொல்லிமலையின் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 62 நடுநிலைப்பள்ளிகளில் 14 உயர்நிலைப் பள்ளிகளில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் 4 மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்,கொல்லிமலை அரசு மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை வேளாண் துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள ஏராளமான காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் முறையாக அலுவலகங்களை திறந்து செயல்படுவதையும் கிராமத்தில் தங்கி பணியாற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் பிரதான விலை பொருட்கள் ஆன காபி, மிளகு, அண்ணாச்சி பழ உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கங்கள் மூலம் இடை தரகர்களின் தலையீடுகளை தடுத்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொல்லிமலை மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் மிளகு மற்றும் காபி உள்ளிட்டவற்றை அரசு நியாய விலைக் கடைகளில் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,உள்ளிட்ட கொல்லிமலையில் உள்ள ஏராளமான மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Next Story