ஆரணி பெல்ஸ் நிதி நிறுவனத்தில் உள்ள காசாளர் மீது தி.மு.க.நகரமன்ற தலைவரின் டிரைவர் தாக்குதல்.

ஆரணி, அக் 25. ஆரணி பெல்ஸ் நிதி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிபவரை ஆரணி நகரமன்ற தலைவரின் கார் டிரைவர் தாக்குதல் நடத்தி மிரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி பெல்ஸ் நிதி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிபவரை ஆரணி தி.மு.க நகரமன்ற தலைவரின் கார் டிரைவர் தாக்குதல் நடத்தி மிரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் பெல்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையி்ல் குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு ஒன்றுக்கு கடனுதவி கொடுத்துவிட்டு வசூல் செய்யும்போது பணம் சரியாக கட்டாமல் பிரச்சினை ஆனதாக தெரிகிறது. இந்த மகளிர் குழுவில் ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணியின் கார் டிரைவர் சதீஷின் சகோதரியும் ஒருவராம். இதனால் சதீஷ் என்பவர் நகரமன்ற உறுப்பினர் அரவிந்தன்,ஒப்பந்த நகராட்சி பணியாளர் மௌலி ஆகியோர் ஆரணியில் செயல்பட்டு வரும் பெல்ஸ் நிதி நிறுவனத்தில் காசாளராக பணிபுரியும் ஹரிஹரன் என்பவரிடம் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதனால் ஹரிஹரன் காயமடைந்து இரத்த காயத்துடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகாரை ஏற்கவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story