கர்நாடக போலீசாரிடம் இருந்து தப்பித்த வாலிபர் மீண்டும் கைது
Bhavanisagar King 24x7 |26 Oct 2024 3:55 AM GMT
கர்நாடக போலீசாரிடம் இருந்து தப்பித்த வாலிபர் மீண்டும் கைது
கர்நாடக போலீசாரிடம் இருந்து தப்பித்த வாலிபர் மீண்டும் கைது பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கேதீஸ்வரன். இவருடைய மகன் ராகவன் என்கிற கோழிக்கரன் (வயது 26). இவர் மீது கர்நாடக மாநிலம் சுள்ளியா போலீஸ் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். இந்த நிலையில் பவானிசாகர் இலங்கைதமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த அவரை கர்நாடக போலீசார் கடந்த 5-ந் தேதி கைது செய்து வாகனத்தில் ஏற்றி கர்நாடக மாநிலத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அவர் போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை கர்நாடக போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பவானிசாகரில் மாறு வேடத்தில் தங்கி இருந்த ராகவனை பவானிசாகர் கர்நாடக போலீசாரிடம் மீண்டும் ஒப்படைத்தனர். அவரை கர்நாடக போலீசார் மீண்டும் கைது செய்து கர்நாடக அழைத்து சென்றனர்.
Next Story