கொடிவேரி அருகே வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து சேதம்

கொடிவேரி அருகே வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து சேதம்
கொடிவேரி அருகே வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து சேதம்
கொடிவேரி அருகே வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து சேதம் டி.என்.பாளையத்தை அடுத்த பெரிய கொடிவேரி குள்ள நாய்க்கனூரை சேர்ந்தவர் குமார் (வயது 43). நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. நேற்று காலை கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டனர். மதியம் இவர்களுடைய ஓட்டு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனிடையே குமாரும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததை கண்டார். இதையடுத்து பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், டி.வி. மற்றும் உணவுப்பொருட்கள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேலைக்கு செல்லும்போது வீட்டில் உள்ள சாமி படம் முன்பு குமாரும், அவருடைய மனைவியும் விளக்கு ஏற்றி கும்பிட்டனர். பின்னர் விளக்கை அணைக்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் விளக்கில் இருந்த தீ அருகில் இருந்த துணியில் பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது,' தெரியவந்தது.
Next Story